சென்னையில் பிடிபட்டது நாய்க் கறியா என்பது குறித்து விசாரிக்க அதிகாரிகள் ஜோத்பூர் விரைந்துள்ளனர்.
கடந்த 17ந் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் 2000 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டது என செய்திகள் பரவியது. இதனால் தமிழகமெங்கிலும், முக்கியமாக சென்னையில் இறைச்சி விற்பனை அடிவாங்கியது.
இதனிடையே பிடிபட்டது நாய் கறி இல்லை ஆட்டுக்கறிதான் என கூறப்பட்டது. இதனை டெஸ்ட் செய்ய அந்த கறியானது லேபிற்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க கறி எங்கிருந்து வந்ததோ அதே பகுதிக்கு சென்று விசாரிக்க அதிகாரிகள் ஜோத்பூர் விரைந்துள்ளனர். விரைவில் வந்தது நாய்க் கறியா அல்லது ஆட்டுக்கறியா என்பது தெரிந்துவிடும்.