Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒத்திவைக்கப்படும் பள்ளிகள் திறப்பு? – முதல்வர் முக்கிய ஆலோசனை!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (13:49 IST)
தமிழகத்தில் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை ஆபத்து உள்ள நிலையில் அவசரப்பட்டு பள்ளிகளை திறக்க வேண்டாம் என எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதேசமயம் அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது மீண்டும் தள்ளிவைக்கப்படுமா என்பது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments