Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முந்திய அதிமுக: பாஜக அமைச்சரவையில் இடமா? ஓபிஎஸ் தகவல்!

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (15:15 IST)
பாஜக ஆட்சி அமைத்தால் அதன் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 
 
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதியோடு முடிவடைந்தது. தேர்தலுக்கு பின்னர் எக்சிட்போல் முடிவுகளும் வெளியிடப்பட்டன. அதில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதே போல் தமிழகத்தில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அதன் அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், மே 23 ஆம் தேதி நடக்கும் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். 
இதற்கு முன்னர் மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக அங்கம் வகிக்குமா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன் என பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments