செந்தில் பாலாஜிக்கு ஏது இவ்வளவு பணம்? ஷாக்கான ஓபிஎஸ்!!

Webdunia
திங்கள், 13 மே 2019 (09:30 IST)
செந்தில் பாலாஜிக்கு அப்படி எவ்வளவு பணம்தான் வைத்திருக்கிறார் என தெரியவில்லை என ஓபிஎஸ் வியப்பாக கேட்டுள்ளார். 
 
நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வம் அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை விமர்சித்து பேசினார். ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, அதிமுகவிற்கு துரோகம் இழைத்த செந்தில் பாலாஜிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். 
அதிமுகவின் கூட்டத்திற்கு போகாதே என்று சொல்லி திமுகவின் செந்தில் பாலாஜி பணம் கொடுப்பதாக சொல்கிறார்கள். நான் 40 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன், கூட்டத்துக்கு போ என்று சொல்லி பணம் கொடுப்பாங்க. ஆனால், இவர் போகாதே என பணம் கொடுக்கிறார். 
 
செந்தில் பாலாஜி அப்படி எவ்வளவு பணம்தான் வைத்திருக்கிறார். இந்த தேர்தலுடன் கட்சி தாவி தாவி செல்லும் செந்தில் பாலாஜிக்கு முடிவு கட்ட வேண்டும். அவருக்கு டெபாசிட் கூட கிடைக்கக்கூடாது என பேசி பிரச்சாரம் மேற்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments