Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்க விவகாரம்: ஓபிஎஸ் திடீர் விளக்க கடிதம்!

11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்க விவகாரம்: ஓபிஎஸ் திடீர் விளக்க கடிதம்!
, செவ்வாய், 16 ஜூன் 2020 (10:29 IST)
சட்டப்பேரவை செயலாளருக்கு ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 
 
ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், சட்டப்பேரவை செயலாளருக்கு ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
 
அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எனக்கு எந்தவித உத்தரவும் கொறாடாவிடம் இருந்து வரவில்லை.
 
மறைந்த முதலமைச்சர் ஜெயலிதாவின் மறைவுக்குப் பிறகு தான் முதலமைச்சராக பொறுப்பேற்றதாகவும் அதற்குப் பிறகு நடைபெற்ற நிகழ்வுகளால், அதிமுக இரண்டு அணிகளாக தான் பிளவுபட்டது. 
 
இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் கூட இரண்டு அணிகள் என அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை முடக்கி இருந்தது. எனவே எப்போதும் நான் ஒரு அதிமுக உறுப்பினர் ஆக தான் செயல்படுகிறேன்.கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எப்போதும் நான் எடுத்ததில்லை என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி: கொரோனாவா?