தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டத்தை தொடர ஒப்பந்த செவிலியர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த சில நாட்களாக ஒப்பந்த தொழிலாளர்கள் தாங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் செய்துவருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒப்பந்த செவிலியர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்
இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் காணப்படாததை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனையடுத்து ஒப்பந்த செவிலியா்கள் தங்கள் போராட்டத்தை தொடர உள்ளதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்த செவிலியர்கள் ஒருவரைக்கூட கைவிடக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது என்றும் ஒப்பந்த செவிலியர்கள் ஆறு மாத காலம் ஒப்பந்த அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டனர் என்றும் அவர்களிடம் உள்ள பணி நியமன ஆணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.