கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேமித்து வைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என அணு உலை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உண்டாகும் அணுக்கழிவுகளை அந்த பகுதியிலேயே சேமித்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மக்களிடையே அதற்கு சில எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. இந்த பிரச்சினைக்காக வருகிற ஜூலை 10ம் தேதி அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அணு உலை நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ”அணு உலை 1 மற்றும் 2 ஆகியவற்றில் உள்ள அணுக்கழிவுகள்தான் இங்கே சேமித்து வைக்கப்பட உள்ளது. இந்த கழிவுகள் கதிர்வீச்சுதன்மை இல்லாதவை. இவற்றை வேறு வகையான தேவைகளுக்கும் பயன்படுத்தமுடியும். மேலும் இதுபோன்ற அணுக்கழிவு சேமிப்பு மையங்கள் இங்கு மட்டுமல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும் உருவாக்கப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.