Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2026 தேர்தலில் தமிழகத்திலும் போட்டி.. புதுவை முதல்வர் அறிவிப்பு.. விஜய்யுடன் கூட்டணியா?

Siva
வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (13:28 IST)
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் தங்களது என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவையில் தற்போது என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அமைந்து வரும் நிலையில், பாஜகவுக்கும் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே விஜய்யை புதுவை முதல்வர் ரங்கசாமி சந்தித்த நிலையில், அவ்வப்போது இருவரும் கருத்துக்களை பகிர்ந்து வருவதாகவும், விஜய் அரசியல் கட்சியை ஆரம்பிக்க கூட ரங்கசாமி தான் சில ஆலோசனைகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், என் ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா அக்கட்சியின் அலுவலகத்தில் நடந்த போது, 2026 சட்டமன்ற தேர்தலில் புதுவையில் மட்டுமின்றி தமிழகத்திலும் என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே அந்த கட்சிக்கு புதுவை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நல்ல செல்வாக்கு உள்ளது. இந்த தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என்று கூறப்படுவது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.465 கோடி ஆன்லைன் மோசடி: பிரபல டிராவல்ஸ் நிறுவனத்துக்கு தொடர்பா?

தானாக முன்வந்து ராஜினாமா செய்யும் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள்.. டிரம்ப் அனுப்பிய இமெயிலால் பரபரப்பு..!

அம்மாவோட ரூட்டுதான் சரி!? அதிரடியாக களமிறங்கும் எடப்பாடி பழனிசாமி! - அதிமுக ரொம்ப பிஸி!

மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து! பக்தர்கள் நிலை என்ன? - மீண்டும் மீண்டும் துயரம்!

ஊர் உறங்கிய பின் நள்ளிரவில் பதில்.. திமுக ஆட்சியில் விடியலே இல்லை: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments