Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க தொகுதி ஒப்பந்தம் முடிவு!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (15:06 IST)
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

 
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் அவரது ராஜினாமா குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும் புதுச்சேரியில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என அறிவித்ததை அடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. 
 
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளதால் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்கிறது. அதே சமயம் கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஆம், அதன்படி பாஜக, அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி இன்று மாலைக்குள் இறுதி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 14 தொகுதிகள் என்.ஆர். காங்கிரஸ், 10 தொகுதிகள் பாஜக, அதிமுக 6 தொகுதிகள் என பேசப்பட்டது. ஆனால் இதற்கு என்.ஆர். காங்கிரஸ் ஒப்புக்கொள்ளாததால் தற்போது என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், பா.ஜ.க, அதிமுகவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments