Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24-ல் விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி! தேமுதிக தலைமைக் கழகம் அறிவிப்பு

Senthil Velan
வியாழன், 18 ஜனவரி 2024 (17:36 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் வரும் 24ம் தேதி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
 
உடல்நல குறைவால் காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் வரும் 24ம் தேதி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

ALSO READ: ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கும், ஓபிஎஸ்-க்கு எந்த தொடர்பும் இல்லை! ஜல்லிக்கட்டு நாயகன் இல்லை - ஜெயக்குமார்
 
இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், புரட்சிக்கலைஞர் கேப்டன்  நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என என்று தேமுதிக தலைமை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு வழங்கிய 900 மின் பேருந்துகள்! வாங்க மறுத்த தமிழகம்! - என்ன காரணம்?

இந்தியா இரக்கமே இல்லாமல் வரி விதித்துக் கொல்கிறது! இப்படி பண்ணலைன்னா..? - ட்ரம்ப் ஆதங்கம்!

வரிவிதிப்பால் ஏற்பட்ட இழப்பு: 200 பில்லியன் செட்டில்மெண்ட் கேட்கும் நிறுவனங்கள்! - பதுங்கிய ட்ரம்ப்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நியாயம் கேட்ட முதியவருக்கு அடி, உதை! - அன்புமணி கண்டனம்!

ஒரு ரூபாய்க்கு ஒரு சிம்கார்டு.. பி.எஸ்.என்.எல். வழங்கிய அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments