Publish Date: Wed, 21 Oct 2020 (08:49 IST)
Updated Date: Wed, 21 Oct 2020 (09:56 IST)
இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதில் தாமதமகும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை வெளியேறிய பின் தமிழ்நாட்டிற்கு மழை தர கூடிய வடகிழக்கு பருவமழை செப்டம்பர் மாதத்தில் தொடங்கும். ஆனால் இந்த முறை அக்டோபர் மாதம் ஆகியும் பருவமழை துவங்கவில்லை.
இந்நிலையில் இது மேலும் தாமதமாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.