கஞ்சா சாக்கலேட் விற்பனை செய்த வட மாநில நபர் கைது.....

J.Durai
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (13:42 IST)
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சித்தம்பலம் பிரிவு பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
 
இந்த நிலையில் அந்த மளிகை கடையில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட சிவாவை காவல் நிலையம் அழைத்து வந்து விற்பனை நடத்திய போது அவர் கஞ்சா சாக்கலேட் விற்பனை செய்தது தெரிய வந்தது.
 
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர் மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
பல்லடம் அருகே கஞ்சா சாக்கலேட்டுகள் விற்பனை செய்த வட மாநில நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை கனகாவின் தந்தை இயக்குனர் தேவதாஸ் காலமானார்

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்போது தொகுதி மக்களை கேட்டுத்தான் நீக்கினாரா? ஈபிஎஸ்க்கு டிடிவி கேள்வி

எடப்பாடி ஒரு பெரிய தலைவர் இல்லை.. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை: செங்கோட்டையன்

தொடர் கனமழை எதிரொலி.. மரம் விழுந்து பள்ளி சுவர் சேதம்.. OMR சாலையில் போக்குவரத்து நெரிசல்..

திமுக எங்களுக்கு எதிரி இல்லை!.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!..

அடுத்த கட்டுரையில்
Show comments