சென்னை அருகே வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே நடந்த மோதலை விசாரிக்க சென்ற காவல்துறையினரை வடமாநில தொழிலாளர்கள் சுற்றி வளைத்து தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை அடுத்து காவல்துறை தற்போது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல்துறையினரை தாக்கிய வட மாநில தொழிலாளர்களை விசாரணை செய்த போலீசார் முதல் கட்டமாக ஐந்து பேர்களை கைது செய்த நிலையில் அடுத்த கட்டமாக 28 பேர்களை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து இந்த விவகாரத்தில் மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரை தாக்குவது யாராக இருந்தாலும் அவர்களை காவல்துறை சும்மா விடாது என்றும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக வருவதாகவும் விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.