Publish Date: Fri, 20 Oct 2023 (10:31 IST)
Updated Date: Fri, 20 Oct 2023 (10:32 IST)
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டு பருவ மழைகள் இந்தியாவில் பெய்து வரும் நிலையில் சமீபத்தில் தென்மேற்கு பருவமழை நிறைவு பெற்றது.
இந்த நிலையில் அக்டோபர் மூன்றாவது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நல்ல மழை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran