Publish Date: Fri, 03 Dec 2021 (10:19 IST)
Updated Date: Fri, 03 Dec 2021 (10:36 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
இப்போது ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே பழனிச்சாமியும் இருந்து வருகின்றனர். கட்சியின் அதிகாரமிக்க பதவியாக இந்த இரு பதவிகளும் உள்ளன. இந்நிலையில் இந்த பதவிகளுக்கான தேர்தல் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடக்கிறது.
அதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 10 மணி முதல் நாளை மாலை 3 மணி வரை நடக்கிறது.