Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் இனி இல்லை: அமைச்சர் மா சுப்பிரமணியம் தகவல்

தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் இனி இல்லை: அமைச்சர் மா சுப்பிரமணியம் தகவல்
, செவ்வாய், 8 ஜூன் 2021 (10:49 IST)
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பதவியேற்றவுடன் அறிவித்த அறிவிப்புகளில் ஒன்று தடுப்பூசிகளுக்கு உலக அளவில் டெண்டர் போடப்படும் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் தமிழ்நாடு அரசின் சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டது என்பதும் ஆனால் அந்த டெண்டரை எடுக்க உலகின் எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் உலகளாவிய டெண்டர் ஏன் எந்த நிறுவனமும் எடுக்கவில்லை என்பது குறித்து ஆய்வு செய்து மீண்டும் டெண்டர் விடப்படும் என்று தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு இனி உலகளாவிய டெண்டர் கோரப்படாது என்றும் அதற்கான அவசியமும் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.
 
இதனை அடுத்து இனி உலகளாவிய டெண்டர் கோரப்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே உலகில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு மட்டும்தான் தடுப்பூசியை ஏற்றுமதி செய்வோம் என்றும் மாநில அரசுக்கு ஏற்றுமதி செய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏறுமுகத்தில் தங்கம் - இன்றைய விலை நிலவரம்!