வெள்ளை அறிக்கை இல்லை; மஞ்சள் கடுதாசி- கமல் கிண்டல்

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:21 IST)
பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். இது குறித்து நடிகர் கமல்ஹாசன் இது வெள்ளை அறிக்கையில்லை; இதை மஞ்சல் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம் எனக்  கிண்டல் அடித்துள்ளார்.

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று  வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார. அப்போது அவர் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக இதுகுறித்து விளக்கம் கொடுத்தார்.

அதில், தமிழகத்த்ல் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும், தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.75 லட்சம் கோடி எனவும் தமிழககத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும்2. 63 லட்சம் கடன்சுமை உள்ளதாகவும், மத்திய அரசிடம் இருந்து வந்து கொண்டிருந்த 33% வருவாய் குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒரு யூனிட் மின்சாரம் வாங்கி விநியோகிப்பதால் அரசுக்கு ரூ. 2.36% இழப்பு ஏற்படுவதாகவு, தமிழக அரசு வாங்கியுள்ள கடன்களுக்கு மாதம் தோறும் ரூ.87.31 கோடி வட்டி கட்டி வருவதாகவும், மின்சாரம் மற்றும் போக்குவரத்தில் மாநில அரசிற்கு ரு.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கட்சிகள் முன்வைத்துப் பேசிவரும் நிலையில் தற்போது நடிகர்  நடிகரும் மக்கள் நிதி மய்யம் கட்சியில் தலைவருமான கமல்ஹாசன் ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார். அதில் இது வெள்ளை அறிக்கை இல்லை ; மஞ்சல் கடுதாசி  என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments