Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் வாகனங்கள் வெளியே வர தடை: போலீசார் அறிவிப்பு

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (12:58 IST)
சென்னையில் இன்று நள்ளிரவு முதல் வாகனங்கள் வெளியே வர தடை
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 19-ஆம் தேதி முதல் அதாவது நாளை 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த முழு ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் இன்று நள்ளிரவு முதல் யாரும் வாகனங்களில் வெளியே வரகூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19 முதல் 30-ஆம் தேதி வரையிலான முழு ஊரடங்கில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வெளியில் யாரும் வரக்கூடாது என போலீசார் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளனர்
 
இதனை அடுத்து சென்னையின் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் எச்சரிக்கையை மீறி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளதால் நாளை முதல் 30-ஆம் தேதி வரை எந்த வாகனமும் சென்னையில் ஓட வாய்ப்பில்லை என கருதப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

முதல்வர் ஸ்டாலின் கண்டுபிடித்த புதிய மடைமாற்று வித்தை: நயினார் நாகேந்திரன்

நாட்டின் புதிய ஜின்னா தான் மம்தா பானர்ஜி.. பாஜக கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் ஏப்ரல் 21 வரை மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments