சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது. சென்னையில் கடந்த 3 நாட்களாக அதாவது திங்கள் முதல் புதன் வரை தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டு இருந்தது என்பதும் இதனை அடுத்து நேற்று தடுப்பூசி கிடைத்ததன் காரணமாக நேற்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று மீண்டும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம் நிறுத்தப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்ப வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை வலியுறுத்தியும் தமிழகத்திற்கு போதுமான தடுப்பூசியை அனுப்பாத மத்திய அரசுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
ஆனால் அதே நேரத்தில் இன்று மாலைக்குள் தடுப்பூசி சென்னைக்கு வந்து விடும் என்றும் அதன்பிறகு தடுப்பூசிகளை அனைத்து மாவட்டத்திற்கு பிரித்துக் கொடுக்கும் பணி நடக்கும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.