Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ரூ.2000 நோட்டுகள் வாங்க மாட்டாது- ஆம்னி உரிமையாளர்கள் சங்கம்

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (17:24 IST)
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து  அல்லது பேங்கில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று  மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்த நிலையில், மக்கள் தங்களிடம்  உள்ள 2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை 29ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டை பயணிகள் கொடுத்து டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 28ஆம் தேதிக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறி இருந்த நிலையில். ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக 90 சதவீதம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. 10% மட்டுமே பயணிகள் கடைசி நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்ய நேரில் வந்து புக்கிங் செய்கின்றனர்.

இந்நிலையில் இன்று முதல் மத்திய அரசின் கெடு நிறைவடைந்த நிலையில். நாளை 29ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டை பயணிகள் கொடுத்து டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம் எனவும். தொடர்ந்து உங்கள் நல் ஆதரவையும்.பயணத்தையும். எங்கள் அனைத்து ஆம்னி பேருந்துகளில் தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments