Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினிகாந்த் படங்களை திரையிட விடமாட்டோம்- வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

Advertiesment
vattal nagarajan
, வியாழன், 28 செப்டம்பர் 2023 (16:58 IST)
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர் நாடாகத்தில் நாளை முழு அடைப்பு  போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ் நாட்டிற்கு காவிரி நீரை திறப்பதற்கு எதிர்ப்பு கூறி வாட்டாள்  நாகராஜ் தலைமையில்  வரும் வெள்ளிக்கிழமை கர்நாடகம் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

அம்மாநில விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நாளை மாண்டியா மற்றும் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதற்கு பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த  நிலையில், காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்காவிட்டால், அவர் படங்களை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் பகிரங்கமால மிரட்டல் விடுத்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபோன் 15 மாடல் அதிகம் ஹீட் ஆகிறதா? பயனர்கள் அதிர்ச்சி தகவல்