Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய அரசு எவ்வளவு வற்புறுத்தினாலும் இதை மட்டும் செய்ய மாட்டோம்:அமைச்சர் செங்கோட்டையன்

Advertiesment
மத்திய அரசு எவ்வளவு வற்புறுத்தினாலும் இதை மட்டும் செய்ய மாட்டோம்:அமைச்சர் செங்கோட்டையன்
, புதன், 16 செப்டம்பர் 2020 (13:47 IST)
3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் மத்திய அரசு இந்த விஷயத்தில் எவ்வளவு வலியுறுத்தினாலும் இதை ஏற்க மாட்டோம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் இன்று சட்டசபையில் விளக்கமளித்தார்
 
நாடு முழுவதும் 3, 5 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
மூன்றாம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு வைத்தால் மாணவர்கள் அச்சம் கொள்வார்கள் என்றும் அதற்கு மேல் படிக்காமல் படிப்பை நிறுத்தி விட வாய்ப்பு அதிகம் என்றும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரித்தனர் 
 
இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார். 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் இதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்
 
இந்த விஷயத்தில் மத்திய அரசு எவ்வளவு வலியுறுத்தினாலும் சில கொள்கை முடிவில் பின்வாங்க மாட்டோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 வருடம் பழமையான டி.என்.ஏ க்ளோனிங்! – வெற்றிகரமாக பிறந்த குதிரை!