Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டணிக்கு வர தயங்கும் அரசியல் கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி அப்செட்?

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (13:17 IST)
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டால் அதிமுக கூட்டணிக்கு பல கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது வரை ஒரு கட்சி கூட அந்த கூட்டணியில் இணைந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை 
 
மேலும் திமுக கூட்டணி உறுதியாக இருக்கும் நிலையில் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது 
 
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட அதிமுக கூட்டணியில் இணைய தயக்கம் காட்டுவதாகவும் அதிமுக கூட்டணியில்  இணைந்தால் வெற்றி பெற முடியுமா என ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

ALSO READ: இளைஞரணி மாநாட்டிற்கு எதிர்பார்த்த கூட்டம் ஏன் வரவில்லை? நிர்வாகிகளை காய்ச்சி எடுத்த தலைமை?
அப்படியே அதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்றாலும் கூட எம்பியாக மட்டுமே இருக்க முடியும் என்றும் ஆனால் பாஜக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் கட்சிகள் கணக்கு செய்து வருகின்றன. 
 
எனவே சின்ன சின்ன அமைப்புகள் கூட அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அப்செட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments