Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லை: அமைச்சர் நிதின்கட்கரி..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (16:04 IST)
கடந்த அதிமுக காலத்தில் சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட போது திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன என்பதும் விளை நிலங்களை அழித்துவிட்டு எங்களுக்கு சாலை தேவை இல்லை என போராட்டம் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மாநிலங்களவைகள் மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எதிர் கட்சியாக இருந்த போது சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்ற அரசியல் கட்சிகளும் தற்போது அமைதி காத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments