Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை..! இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு..!!

EPS Stalin

Senthil Velan

, செவ்வாய், 9 ஜூலை 2024 (11:50 IST)
விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது என்றும் மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு என்றும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த குற்ற சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார்.

●புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை.
 
●தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை.
 
●தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.
 
இனி இந்த விடியா திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை என்று எடப்பாடி விமர்சித்துள்ளார். எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன் இன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது என்றும் மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு என்றும் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?