Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயஸ் கார்டனுக்குள் செல்ல யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்: கொந்தளிக்கும் எச்.ராஜா!

போயஸ் கார்டனுக்குள் செல்ல யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்: கொந்தளிக்கும் எச்.ராஜா!

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2017 (16:30 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் பங்களாவில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இந்நிலையில் போயஸ் கார்டனில் அத்துமீறி வருமான வரித்துறை நுழைந்ததாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். சசிகலாவிடம் அனுமதி வாங்க வேண்டும் என சிலரும், தன்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என தீபாவும் கூறி வருகின்றனர். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
 
இன்று காலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போயஸ் கார்டனை சோதனை செய்தபோது சசிகலாவிடம் அனுமதி வாங்கவில்லை என்றார்கள். அதே போல தீபாவும் தன்னிடம் அனுமதி வாங்கவில்லை என்று கூறியிருக்கிறாரே என்றார்.
 
மேலும், சோதனை செய்ய அந்த துறை அதிகாரிகளிடம் சோதனைக்கான வாரண்ட் இருந்தால் போதும். வருமான வரித்துறை அதிகாரிகள் உரிய வாரண்டேடு வந்துள்ளனர். அதிமுகவினருக்கு தலை எங்கே, கால் எங்கே இருக்குன்னே தெரியவில்லை.
 
போயஸ் கார்டனுக்குள் செல்ல யாரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஜெயலலிதா இப்போது இல்லவே இல்லை. எனவே அங்கு சோதனை நடத்த எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருப்பது அது அவர்களின் அறிவாளி தனம்தான் என எச்.ராஜா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

பிரிவினையை தூண்டும் மோடி.! பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும்..! மல்லிகார்ஜுன கார்கே.!!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments