Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி முடிந்துவிட்டது: செ.கு. தமிழரசன் அறிவிப்பு

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (08:46 IST)
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டது. இந்த கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதியும் 3 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. ஆனால் மக்கள் நீதி மய்யம், குடியரசு கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை
 
இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன், 'கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம் உடனான கூட்டணி முடிந்துவிட்டது' என, தெரிவித்தார். 
 
மேலும்  தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு மாற்றாகவே, மக்கள் நீதி மைய்யத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தாகவும் தற்போது, அந்த கூட்டணி முடிந்து விட்டதாகவும் கூறிய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன், 'வரும் உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கவிருப்பதாக கூறினார். 
 
கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி வைத்த ஒரே கட்சியும் அந்த கூட்டணியில் இருந்து விலகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments