கிட்டத்தட்ட பத்து நாட்கள் என்ற நீண்ட பொங்கல் விடுமுறையை அனுபவித்துவிட்டு இன்றுடன் விடுமுறையை முடித்துவிட்டு பணிக்குத் திரும்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு முழுவதுமே இனிமேல் நீண்ட விடுமுறை கிடையாது என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தான் உள்ளது
ஜனவரி 11 முதல் 19 வரை கிட்டத்தட்ட பொங்கல் விடுமுறையை அனுபவித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இனிமேல் நீண்ட விடுமுறை இந்த ஆண்டு முழுவதும் கிடையாது
பெரும்பாலான விடுமுறை சனி ஞாயிறுகளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக வரும் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இனிமேல் அடுத்த விடுமுறை தெலுங்கு வருட பிறப்பு மார்ச் 25ஆம் தேதியும், ஏப்ரல் 6-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி விடுமுறாஇ தான் என்பதால் அடுத்த விடுமுறைக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த ஆண்டு பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி ஆகியவை சனி ஞாயிறு கிழமைகளில் வருவதால் இந்த ஆண்டு முழுவதும் பெரிய அளவில் விடுமுறையை எதிர்பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது