கொரோனாவால் உலகில் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு ஏனைய வளரும் நாடுகள் வரை அனைத்து நாடுகளும் திணறிவருகின்றன.
இந்நிலையில், இந்திய போலீஸாரால் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக தீவிரமாகத் தேடப்பட்டு வரும் நித்யானந்தா கைலாசா தீவில் செட்டில் ஆகி விட்டதாக பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
பல்வேறு நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கைலாசா தீவில் கொரொனா இல்லை என நித்யானந்தாவின் சிஷ்யைகள் டிக்டாக்கில் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
மேலும் நித்யானந்தா ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காட்டியளிக்கிறார்.