Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டுப்பாடம் கொடுத்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி

Advertiesment
வீட்டுப்பாடம் கொடுத்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி
, செவ்வாய், 29 மே 2018 (13:00 IST)
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் 1 மற்றும் 2ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என்றும் அவ்வாறு கொடுத்தால் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்றும் வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.
 
1 மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுப்பதாகவும், அந்த வயது குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் தேவையில்லை, வீட்டுப்பாடம் கொடுப்பதால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் புருசோத்தமன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்./
 
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் விசாரணை செய்த நிலையில் சி.பி.எஸ்.இ-யில் 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், இந்த வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணித பாடங்களை மட்டும் பள்ளியில் சொல்லித்தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதையும் மீறி வீட்டுப்பாடம் கொடுத்தது தெரிய வந்தால் அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 
 
webdunia
ஏற்கனவே 1,2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் விதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த விதியை பல பள்ளிகள் மீறியிருப்பதால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவினர் கவலைப்பட வேண்டாம்; திரும்பி வந்துவிடுவேன்: ராகுல் கிண்டல்!