Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியர் மாணவர்கள் தேர்ச்சி குறித்து எந்த இமெயிலும் வரவில்லை: அமைச்சர் அன்பழகன்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (16:12 IST)
அரியர்ஸ் மாணவர்களை ஆல்பாஸ் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இருந்து எந்தவித இமெயிலும் வரவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தனது கருத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் கருத்தாக கூறி வருவதாகவும் அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
பொறியியல் படிப்புகளில் மாணவர்களை ஆல்பாஸ் செய்து சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கழகம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இது குறித்து இமெயில் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து இறுதி முடிவை தமிழக அரசு எடுக்கும் என்று தெரிவித்தது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார் 
 
இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் கூறியபோது அரியர்ஸ் மாணவர்களை ஆல்பாஸ் செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கழகம் எதிர்ப்பு என்ற வெளியான தகவல் தவறு என்றும், மாணவர்களை ஆல்பாஸ் செய்ய தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இருந்து எந்தவித மின்னஞ்சலும் வரவில்லை என்றும் தெரிவித்தார் மேலும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தனது கருத்தை அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் கருத்தாக கூறி வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments