Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

11வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! பொதுமக்கள் மகிழ்ச்சி!

11வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! பொதுமக்கள் மகிழ்ச்சி!
, செவ்வாய், 27 ஜூலை 2021 (08:09 IST)
கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்ததை அடுத்து இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102ஐ கடந்துவிட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரே விலையில் இருந்ததால் சென்னையிலும் விலை உயரவில்லை என்று குறிப்பிட்டு தெரிந்தன 
 
இந்த நிலையில் 11வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு சரியான தகவலாக உள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 102.49 என்ற நிலையிலும் டீசல் விலை ரூ.94.39 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் நள்ளிரவில் கனமழை: சாலைகளில் மழைநீர்!