Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனித்து போட்டி: அதிமுக அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ந்த பாஜக

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (22:40 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பாஜகவுடன் இணக்கமாக இருந்த அதிமுக, தற்போது திடீரென நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. தம்பிதுரை, ஜெயகுமார் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் பாஜகவை நேரடியாகவே விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர்

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது சந்தேகமே என்ற ரீதியில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணி இல்லையென்றால் பாஜகவுடன் எந்த ஒரு சிறிய கட்சியும் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 21 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தனித்தே போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments