ஜக்கையனை தவிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதையடுத்து அரசு கொறடா ராஜேந்திரன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகர் தனபாலிடம் வலியுறுத்தினார். சபாநாயகர், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து உரிய விளக்கம் வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து தினகரன் அணியில் இருந்து இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். இந்நிலையில் தற்போது தினகரன் ஆதரவு எல்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதனிடையே எம்.எல்.ஏ. ஜக்கையன் தினகரன் அணியில் இருந்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அணியில் சேர்ந்துக்கொண்டார். இதனால் ஜக்கையன் மீது நடவடிக்கை பாயவில்லை.
ஜக்கையன் மீது நடவடிக்கை எடுக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜக்கையன் தினகரன் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணியில் சேர்ந்த பின் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார் என்பதால் அவர் மீது நடவடிக்கை பாயவில்லை என விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.