கோவையில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நிஷாகந்தி மலர் நேற்று இரவு பூத்தது.
பூக்களில் பலவகை உள்ளது போல பல காலத்திற்கு ஒருமுறை பூக்கும் அரிய மலர்களும் உள்ளது. 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரை போல ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நிஷாகந்தி மலரும் மிகவும் பிரபலமானது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்த பூ இரவில் மட்டுமே பூக்கும் விடிந்ததும் வாடிவிடும்.
இந்த அரிய மலர் கோவை அன்னூரில் நேற்று இரவில் பூத்தது. இந்த பூ மலர்வதை ஏராளமான மக்கள் இரவில் காத்திருந்து பார்த்துள்ளனர். இந்த நிஷாகந்தி மலரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.