Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்து நாட்கள் கழித்து பார்வையிட வரும் நிர்மலா சீதாராமன்: டெல்டா மக்கள் அதிருப்தி

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (20:12 IST)
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடந்த பத்து நாட்களுக்கு முன் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இந்த சேதத்தை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் சொல்ல பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் யாரும் வருகை தராதது அந்த பகுதி மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இந்த நிலையில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை அல்லது நாளை மறுநாள் தமிழகம் வருவார்  என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மத்திய குழுவே பார்வையிட்டு சென்ற பின்னர் பத்து நாட்கள் கழித்து இனிமேல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து என்ன பயன்? என டெல்டா பகுதி மக்கள் அதிருப்தியுடன் காணப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமன் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்து வரும் நிலையில் டெல்டா பகுதி மக்களின் இந்த அதிருப்தி பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments