Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம்… தாய் தந்தை இல்லாத போது மாணவன் விபரீத முடிவு!

Advertiesment
ஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம்…  தாய் தந்தை இல்லாத போது மாணவன் விபரீத முடிவு!
, வியாழன், 17 செப்டம்பர் 2020 (10:08 IST)
சென்னையில் ஆன்லைன் வகுப்பு பிடிக்காமல் மன அழுத்தத்தில் இருந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேடவாக்கம் புஷ்பாநகர் வினோத் தெருவை சேர்ந்த தம்பதிகள் செல்வகுமார் மற்றும் சுந்தரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் விக்னேஷ் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் ஜெய் கார்த்திக் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில் அவர் ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வந்துள்ளார். ஆனால் அந்த வகுப்புகள் தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் நேற்று மதியம் தாய் தந்தை இருவருமே வீட்டில் இல்லாத போது தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சம்மந்தமாக பள்ளிக்கரணை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பித்ததில் இருந்தே இதுபோல மாணவர்கள் தற்கொலை செய்துவருவது வாடிக்கையாகி வருவது கவலையை அளிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழகத்தின் திமிங்கலங்களுக்கு பாஜக வலை?? திமுக கூடாரமாகும் பாஜக!