Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டிலேயே நீலகிரியில் பெட்ரோல் விலை உச்சம்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (10:01 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல், மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை ஏற்கனவே பார்த்தோம். 
 
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
 
137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள்,  இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கூறியது போல இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. 
 
அதன்படி சென்னையில் இன்று காலை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.93.71 காசுகளுக்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நீலகிரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.87க்கும் 1 லிட்டர் டீசல் ரூ.95.78க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments