Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்படியா பச்ச பச்சயா பேசுறது? பொள்ளாச்சி விவகாரத்தில் பொங்கிய நடிகை

Advertiesment
இப்படியா பச்ச பச்சயா பேசுறது? பொள்ளாச்சி விவகாரத்தில் பொங்கிய நடிகை
, செவ்வாய், 12 மார்ச் 2019 (16:05 IST)
பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உச்சகட்ட தண்டனை கொடுக்க வேண்டும் என நடிகை நிலானி அழுதபடியே வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூகவலைத்தளங்களை தவறான வழியில் பயன்படுத்தி 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
webdunia
 
இவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
 
இந்நிலையில் சீரியல் நடிகை நிலானி வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் வீடியோவில், என் விஷயத்தில் முக்கை நுழைத்தீர்களே இந்த விஷயத்தை பற்றி பேசுவீர்களா? பேசுனா உள்ளே போய்டுவோம்ன்னு பயம். நீங்கல்லாம் ஆம்பலையா என ஏகபோகமாக அழுதுகொண்டே கெட்ட வார்த்தையில் பேசியுள்ளார்.
 
இந்த கொடூரத்தை பார்த்ததிலிருந்து எனக்கு தூக்கம் வரவில்லை. குற்றவாளிகளை அவர்களது பெற்றோர்களே சோத்தில் விஷம் வைத்து கொள்ள வேண்டும் என நிலானி ஆவேசமாக பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொள்ளாச்சி கொடுமை: பப்ளிக்கா உண்மையை சொன்ன பிரசன்னா! கொதித்தெழுந்த குஷ்பு!