Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மது அருந்தியவர்களை தட்டி கேட்ட இளைஞர் இரவில் படுகொலை

karur
, வியாழன், 16 பிப்ரவரி 2023 (21:52 IST)
தன் சொந்த வீட்டின் முன்பு அராஜகம் செய்து மது அருந்தியவர்களை தட்டி கேட்ட இளைஞர்   நேற்று  இரவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கரூரில் வீட்டின் முன்பு இளைஞர்கள் மது அருந்துவதை தட்டிக் கேட்டதை சமையல் கலைஞர் கத்தியால் குத்தி கொலை - தப்பியோடிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 
கரூரில் உள்ள ஹோட்டல்கள், பெட்டிக்கடைகளில் என்று 24 மணி நேரமும் மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த மதுக்களை பெண்கள் நடமாடும் இடம், கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் இடம் மற்றும் கோயிலின் அருகேயே மது குடிப்பவர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வரும் நிலையில், அவரது தொகுதியில் அதுவும் வீட்டின் முன்பு கஞ்சா போதையில்  மது அருந்தியவர்களை தட்டி கேட்ட வாலிபரை கொலை செய்து தப்பியோடிய கும்பலின் செயல் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
 
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பாதை கிட்டி சாகிப் தெருவில் வசிப்பவர் மருது என்கின்ற சரவணன் (வயது 35). சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். நேற்று, இரவு சுமார் 9 மணியளவில் இவர் வீட்டில் தனது தாயுடன் இருந்த போது, வீட்டின் முன்பக்கத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.  தன்னுடையை வீட்டின் முன்பு ஏன் மது அருந்துகிறீர்கள் என தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபடைந்த அந்த இளைஞர்கள் சமையல் கலைஞர் வீட்டினுள் இருந்த கத்தியை எடுத்து சரவணனின் தலை, கை, முகங்களில் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்த அவர்கள் சரவணனை பரிசோதித்ததில் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு வந்த கரூர் மாநகர போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டதுடன், கொலையாளிகளை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதுகாப்புத் தொகையை அதிகரித்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்ஜூகர் பெர்க்