Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு இனிமேல் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது – நிதி ஆயோக் அதிர்ச்சி ரிப்போர்ட்

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (12:12 IST)
குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தால் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை உள்பட 21 முக்கியமான நகரங்களில் அடுத்த வருடத்தில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் இல்லாமல் போய்விடும் என்று நிதி ஆயோக் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வினை மேற்கொண்டது நிதி ஆயோக் அமைப்பு. அதில் மற்ற வறட்சியான நகரங்களை விட சென்னையில் நீராதாரங்களும், மழைப்பொழிவும் கணிசமான அளவு இருந்த போதிலும் பல ஆறுகளும், ஏரிகளும், சிறிய நீர்நிலைகளும் வறட்சியடைந்துள்ளன.

இந்த நிலை நீடித்தால் சென்னை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர் முற்றிலுமாக இல்லாமல் போய்விடும். 2030-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 40 சதவீத மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் போய்விடவும் வாய்ப்பு உள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அதிக செலவினங்களை கொண்டது. மேலும் அதன் மூலம் சுத்திகரிக்கப்படும் தண்ணீர் மிக குறைவான அளவே கிடைக்கும் என்பதால் அந்த திட்டம் தற்போது சாத்தியப்படாது. இந்நிலையில் மழைநீரை சேமிப்பதே வறட்சியிலிருந்து தப்பிக்க ஒரே வழி. எனவே மக்களும், அரசாங்கமும் ஒண்றிணைந்து மழைநீர் சேமிப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments