கடுமையானத் தண்ணீர் பஞ்சத்தால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருப்பதால் ஓட்டல்கள் மூடப்படும் அவலமான சூழல் உருவாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பருவமழைப் பொய்த்ததால் இந்த ஆண்டு கோடைக்காலம் முழுவதும் தமிழகமெங்கும் தண்ணீர் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கிறது. சென்னைக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரிகள் வறண்டு விட்டதோடு, மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீரும் வற்றிவிட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தண்ணீர்ப் பற்றாக்குறையால் சென்னை உள்ள பல ஃசாப்ட்வேர் நிறுவனங்கள் தண்ணீர் இல்லாதால் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு கூறிவிட்டது. மேலும் சில ஹோட்டல்கள் தண்ணீர் பற்றாக்குறையால் மூட விருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதேப் போல சில ஹோட்டல்களில் டாய்லட்களையும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் மூடி வைத்த அவலமும் நடந்தது.
ஆனால் அமைச்சர் வேலுமணியோ தமிழகத்துக்கு நவம்பர் மாதம் வரைத் தேவையானத் தண்ணீர் கைவசம் உள்ளதாகவும் தண்ணீர்ப் பஞ்சம் என சொல்லப்படுவது முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளின் வதந்தி என வாய் கூசாமல் சொல்லி வருகிறார். இந்நிலையில் ஹோட்டல் ஒன்றில் தண்ணீர் பஞ்சாயத்தைக் கேலி செய்யும் விதமாக ஒரு நோட்டிஸ் வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘அளவுத் தண்ணீர் ரூ 150 மற்றும் அளவில்லாத் தண்ணீர் 200 ரூ .. சாப்பாடு இலவசம்.’ என அறிவித்துள்ளனர். இதற்கு அமைச்சர் வேலுமணி என்ன பதில் சொல்லப்போகிறார் எனத் தெரியவில்லை.