Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.ஐ.ஏ சோதனை- நேரில் ஆஜராக சீமான் முடிவு

Sinoj
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (15:21 IST)
என்.ஐ.ஏ சோதனைக்கு நேரில் ஆஜராக உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் தமிழக முழுவதும் இன்று காலை முதல் அதிரடியாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக சாட்டை துரைமுருகன் வீட்டில்  நடத்தப்பட்ட சோதனையின்போது,  முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

சாட்டை துரைமுருகன் மனைவி மாதரசி இடம் 3 மணி நேரம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்தனர்.  இதையடுத்து,  பிப்ரவரி 7ஆம் தேதி சாட்டை துரைமுருகன் நேரில் என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் என்.ஐ.ஏ சோதனைக்கு நேரில் ஆஜராக உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து சீமான் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் பாஜகவின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. சோதனை செய்து வருகிறது.

தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது.

வரும் பிப்ரவரி  5 ஆம் தேதி  என்.ஐ.ஏ விசாரணைக்கு கட்சியினருடன் ஆஜராகப் போவதாகவும்,  என்.ஐ.ஏ அதிகாரிகள் தன்னிடம்தான் விசாரணை மேற்கொண்டிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலை புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது. அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும் என்று அவர் கேள்வி எழிப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments