முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் அழைப்பு: என்ன காரணம்?
தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த புதிய தலைமைச் செயலக திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்
அதுமட்டுமின்றி பிப்ரவரி 17ஆம் தேதி செகந்திராபாத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புதிய தலைமைச் செயலக திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.