Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்தை அழைத்த ஜெயலலிதா; அடுத்த முதல்வர் நீங்கதான்?: நல்லா கிளப்புராங்கயா பீதிய!

அஜித்தை அழைத்த ஜெயலலிதா; அடுத்த முதல்வர் நீங்கதான்?: நல்லா கிளப்புராங்கயா பீதிய!

Advertiesment
அஜித்தை அழைத்த ஜெயலலிதா; அடுத்த முதல்வர் நீங்கதான்?: நல்லா கிளப்புராங்கயா பீதிய!
, வியாழன், 6 அக்டோபர் 2016 (12:52 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 14 நாட்களாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


 
 
இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகள் ஏராளம். இவற்றில் எதை நம்புவது என குழம்பி உள்ளனர் பொதுமக்கள். அந்த அளவுக்கு வதந்திகள் உலா வருகின்றன. அந்த வதந்திகளின் வரிசையில் தற்போது புதிதாக ஒரு வதந்தி ஒன்று வருகிறது.
 
அதாவது விஷயம் என்னனா, அப்பல்லோவில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா திடீரென்று நடிகர் அஜீத் குமாரை தன்னை வந்து பார்க்குமாறு அழைத்துள்ளார். அவரும் ரகசியமாக முதல்வரை போய் பார்த்துள்ளார்.
 
அப்போது, முதல்வர் ஜெயலலிதா நடிகர் அஜித்திடம் அதிமுகவை பார்த்துக் கொள்ளுமாறும், தான் சரியாகி வரும்வரை அஜீத்திடமே அனைத்துப் பொறுப்புகளையும் அவர் கொடுக்கத் தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அஜித் மீதுள்ள நம்பிக்கை தான் காரணம் என சொல்கிறார்கள்.
 
இந்த செய்தியை ஒரு ஆங்கில செய்தி இணையதளமும் அடுத்த முதல்வர் அஜித் தான் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்னஞ்சல் கணக்குகளை உளவு பார்க்கும் யாகூ! பயனர்கள் அதிர்ச்சி