Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூர் மாநகராட்சியில் தற்போது புதிய சாலைகள் ? மக்கள் குழப்பம்

karur
, சனி, 23 ஏப்ரல் 2022 (00:14 IST)
தமிழக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில், போடாத சாலைக்கு பில் பார் செய்து அதை திமுக ஒப்பந்ததாரர் முறைகேடாக பணம் பெற்றது இன்னும் கரூர் மக்களிடையே ஆறாத நிலையில், கரூர் மாநகராட்சியில் தற்போது புதிய சாலைகள் ? போடப்பட்டு வருவது குழப்பத்தையும், மக்களிடையே சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. 
 
கடந்த அதிமுக ஆட்சியில், பல்வேறு குற்றச்சாட்டுகளை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு க ஸ்டாலின், விடியல் அரசை கொண்டுவர மக்களிடையே பல்வேறு குறைகளை கேட்டறிந்ததோடு, மக்களுக்கு பயனுள்ள பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்தார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அரியணையில் ஏறியது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களிடையே செல்லும் பொருட்டு திட்டங்கள் தீட்டினாலும், ஆங்காங்கே உள்ள மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள், கட்சிப் பிரமுகர்கள், அரசு நிர்வாகம் மற்றும் எம்எல்ஏக்களின் செயலால் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகி வருவது, நாள்தோறும் நாம் மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் பார்க்கலாம். ஆனால் தற்போது அமைந்துள்ள திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் குற்றச்சாட்டு என்று கூறினாள், அது பொங்கல் தொகுப்பு வழங்கியதில் முறைகேடு மற்றும் ஊழல் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்குப் பின்பு அதிகப்படியாக மக்கள் பேசுவது, கரூர் மாவட்டத்தில் போடப்படாத தார் சாலைகளுக்கு போட்டதாக கணக்கு காட்டி அதை அரசு நிர்வாகத்துடன், பணம் பெற்ற செய்தி அதற்கான தண்டனையாக இதே திமுக அரசு சுமார் 14 க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலை துறையினரை சஸ்பெண்ட் செய்துள்ளது. கரூர் முழுவதும் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் குற்றத்தை அரசு ஒப்புக்கொண்டுள்ளது, என்றும் அதற்குத்தான் அந்த குற்றத்திற்கான காரணத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஏராளமானரை திமுக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது என்ற பேச்சு அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், மீண்டும் சர்ச்சையில் கரூர் மாநகராட்சியில், தார் சாலைகள் போடப்பட்டு வருகின்றன.
 
என்னவென்றால், திமுக ஆட்சி அமைந்தவுடன் மற்றும் அதற்கு முன்னர் உள்ள அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் நன்கு உள்ள நிலையில், அதை, பெயர்த்து மீண்டும் புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இதற்கான ஆதாரத்தை கரூர் பண்டரிநாதன் ஆலயத்தின் அருகே உள்ள தெருவில் கரூர் மாநகராட்சி ஆரம்பித்துள்ளது. கரூர் மாநகராட்சி மேயராக தற்போது பதவி வகிப்பவர் திருமதி கவிதா என்ற படித்த பட்டதாரி பெண்மணி மட்டுமல்லாமல் ஒரு ஆசிரியரும் ஆவார். மேலும் முறைகேட்டிற்கு துணை போகாத வரும் ஆவார் என்று திமுகவினரிடையே பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதிய தார் சாலையில் ஏன் மீண்டும் பறிக்கப்பட்டு அதில் சாலைகள் போடப்படுகின்றது. ஏற்கனவே நகராட்சியில் இருந்து மாநகராட்சி ஆனதால் சொத்து வரி உயர்வு ஒரு புறம், மக்களின் வரிப்பணத்தில் ஏதேனும் முறைகேடுகள் இந்த சாலைகள் அமைப்பதில் ஏற்படாத வண்ணம், கரூர் மாநகராட்சி மேயர் திருமதி கவிதா திகழ வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதுமட்டுமல்லாமல், மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் இல்லாமல், ஒரு சில பகுதிகளுக்கு மட்டும், தெருவிளக்கு மற்றும் கழிவு நீர் போகும் வாய்க்கால்களை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லாலு பிரசாத் யாதவ்வுக்கு ஜாமீன்..ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவு