கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள துப்புறவுப் பணியாளர் வேலைக்கு, பல நூற்றுக் கணக்கான, என்ஜினியரிங் இளைஞர்கள் நேகாணலில் பங்கேற்றுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 நிரந்தர துப்புறவு பணியாளர்கள் வேலைக்கான நேர்காணல், சமீபத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தப் பணிக்கு கல்வித் தகுதியாக எழுதப் படிக்கத் தெரிந்ததாலே வேண்டும் என்பதால் , இந்த நேர்காணலில், டிப்ளமோ படித்தவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள், என்ஜினியரிங் படிப்பு முடித்தவர்கள் என 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், 321 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில்,எம்பிஏ சையத் முக்தார் அகமது என்பவர் சேர்ந்துள்ளார். இஅவர், 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு தற்போது 16 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அதாவது, குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையால் பல இளைஞர்கள் பணி கிடைத்தால் போதும் என்ற நிலையில் விண்ணப்பித்ததாக பலர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.