ஒரு வாரத்தில் தனிக்கட்சி குறித்து அறிவிப்பேன் என்று கூறிய தினகரன் தற்போது அதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், ஆர்.கே.நகர் போல சுயேட்சையாக களமிறங்கி வெற்றி பெற முடியாது என்பது தினகரனுக்கு நன்கு புரிந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சின்னம் வாங்கினால் வெற்றி என்பது எட்டாக்கனி தான். எனவேதான் அவர் தனிக்கட்சி குறித்து யோசித்தார்
ஆனால் இந்த முடிவுக்கு அவரது அணியில் இருக்கும் தங்கத்தமிழ்செல்வன் உள்பட தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தடையாக உள்ளனர். தகுதிநீக்கம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது தனிக்கட்சி ஆரம்பித்தால் தங்களால் புதிய கட்சியில் சேர முடியாது என்று அவர்கள் உறுதிபட அறிவித்துள்ளனர்.
ஆயினும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்படும் தனது ஆதரவாளர்களை சமாதானப்படுத்த தினகரனுக்கு தனிக்கட்சி தவிர வேறு வழியில்லை. இந்த நிலையில் தனிக்கட்சி ஆரம்பிப்பதா? வேண்டாமா? என்று தினகரன் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.