தள்ளிப்போகும் காற்றழுத்த தாழ்வு நிலை! – இந்திய வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (10:04 IST)
இன்று வங்க கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை தள்ளிப்போவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது.

கடந்த சில நாட்களாக புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகாத நிலையில் மிதமான அளவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் 17ம் தேதியான இன்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்திற்குள் உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேகர்பாபுவுடன் திடீர் சந்திப்பு!.. திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?...

400 வைரம்!. ஆனந்த் அம்பானி வாட்ச் எவ்ளோ கோடி தெரியுமா?!....

எங்க கல்யாணம் பண்ணிக்கொடுக்கனும்னு தெரியும்!.. தேமுதிகவுக்கு வரன் தேடும் பிரமேலதா...

5 நாட்களில் தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை!.. டுடே அப்டேட்!..

டிரெஸ் போடுவதில் நேரம் வேஸ்ட் பண்ணாத மார்க் சக்கர்பெர்க்!.. வெற்றியின் சீக்ரெட்!....

அடுத்த கட்டுரையில்
Show comments