இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க பலரும் வதந்திகள் காரணமாக மறுத்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியால் கடந்த 2009ம் ஆண்டு புதிய 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நாணயங்கள் நாடு முழுவதும் புழக்கத்த்ல் உள்ள நிலையில் இந்த நாணயம் போலி என அவ்வபோது சில வதந்திகளும் கிளம்பின.
அதை நம்பில் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் இந்த நாணயங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டிலும் இந்த நிலை தொடர்கதையாக உள்ளது. சில ஊர்களில் பேருந்து நடத்துனர்களே 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரிசர்வ் வங்கி கூறிய நிலையில் மாவட்ட அளவிலான நாணய மேலாண்மை குழு கூடி பல முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் 10 ரூபாய் நாணயத்தை வாங்குமாறு மாநில அரசு வலியுறுத்த வேண்டும். 10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வங்கிகளில் இதுகுறித்த அறிவிப்பை ஒட்ட வேண்டும். வங்கிகளிலும் நேரடியாக 10 ரூபாய் நாணயத்தை பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வங்கி, போக்குவரத்து கழகங்களில் 10 ரூபாய் நாணய புழக்கம் அதிகரித்தால் மக்களிடையே வதந்தி விலகி நாணய புழக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.